Accharam Tamil Cinema Latest News
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய்குமார், வினய், கருணாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் டீசல். இந்த படத்தை எஸ்.பி. சினிமாஸ் மற்றும் தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்துள்ளார்

கதை
வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவரில் மடம் தொடங்கி பரபரப்பாக செல்கிறது.
வடசென்னையில் நடக்கும் டீசல் எண்ணெய் திருட்டை மையமாக வைத்து உருவாகி வெளியாகியுள்ள படம்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக
சாய் குமார் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து க்ரூட் ஆயிலை திருடி பிழைப்பு நடத்தி வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பகுதியிலேயே இன்னொரு டீம் புதிதாக போட்டியாக களம் இறங்குகின்றனர். இந்த புதிய குரூப்பை வைத்து தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க முயலுகிறார் இவர்கள் இருவரையும் அரவனைத்து செல்லும் தலைவன்
சச்சின் கேத்கர்.
ஆனால் அது தன்னுடைய கருப்பு சந்தை வியாபாரத்திற்கு தடையாக இருக்கும் என்பதால் சாய்குமார் அந்த முயற்சியை தடுக்கிறார். இதனால் சாய்குமார் கைது செய்யப்படுகிறார். கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது எனபதே படத்தின் மீதிக்கதை.

ஹரிஷ் கல்யாண் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதுல்யா ரவி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் வினய் மிரட்டியுள்ளார். ஹரிஷ் கல்யாண் வளர்ப்பு அப்பாவாக சாய்குமார், கருணாஸ், அனன்யா, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேத்கர், அபூர்வா சிங் விவேக் பிரசன்னா, தங்கதுரை, தீனா, ரமேஷ் திலக் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
எம்.எஸ்.பிரபு மற்றும் ரிச்சர்ட் நாதன் இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரய பலம். திபு நினன் தாமஸ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

க்ரூட் ஆயில் ஸ்மக்லிங் குறித்த கதையை டீட்டெய்லாக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. பாராட்டுக்கள்.

