Accharam Tamil Cinema Latest News
அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் டி.எஸ். கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில் டி.ஜெயவேல் இயக்கத்தில் சவுந்திரபாண்டியன், வேலா ராமமூர்த்தி, சாய் தீனா, பூவையர், அஜய் அர்னால்டு, அர்ஜுன்,ஜாவா சுந்தரேசன், தலைவாசல் விஜய், விநோதினி,கிச்சா ரவி, ராஜ்மோகன்மற்றும் பலர் நடித்து அக்டோபர் 31 ல் வெளியாகும் மடம் ராம் அப்துல்லா ஆண்டனி. கதைவேலா ராமமூர்த்தி தொழில் அதிபராக இருக்கிறார். அவரது பேரனை பூவையர் நண்பர் இருவருடன் சேர்ந்து கடத்தி அந்த பலயனை துண்டு துண்டாகி வெட்டி மூட்டையில் கட்டி பாலத்தின் நடுவில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். அதிர்ச்சியடைந்த வேலா ராமமூர்த்தி தனக்கு விசுவாசமான இன்ஸ்பெக்டர் சாய் தீனாவிடம் தன் பேரனை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து என்கவுண்டரில் சாகடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார். அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக சேர்ந்த சவுந்திரபாண்டியன் பூவையரையும் பூவையர் நணபர்களையும் காப்பாற்ற பௌராடுகிறார். ஏன் பூவையரை காப்பாற்றஃபோராடுகிறார்? பூவையர் ஏன் அந்த பையனை கடத்தினார்? என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.பூவையர் நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். அவரது நண்பர்களாகஅஜய் அர்னால்டும், அர்ஜுனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இன்ஸ்பெக்டராக சாய்தீனா நடிப்பு அருமை. வில்லனாக வேலா ராமமூர்த்தி நடிப்பும் அருமை. கான்ஸ்டபுளாக சவுந்திரபாண்டியன் நடிப்பும் அருமை. ஜாவா சுந்தரேசன், தலைவாசல் விஜய், விநோதினி,கிச்சா ரவி, ராஜ்மோகன் வழக்கு எண் முத்துராமன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்நிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். எல்.கே.விஜயின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை.இயக்குநர் டி ஜேயவேல் புகையிலை பேக்டரியை ஓழிக்கவேண்டும் என்பதை கருவாக கொண்டு எல்லோரும் ரசிக்கும்படியான படத்தை சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள். பார்க்கலாம். எல்.கே.விஜயின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை.

