Accharam Tamil Cinema Latest News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், பசுபதி, நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகியிருக்கும் படம் பைசன். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது
கதை
கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் மாரி செல்வராஜ் வாழ்வில் நடந்த கதையும் கலந்து சொல்லியிருப்பதே பைசன் படத்தின் கதை.
ஒரு கபடி ஆடும் இளைஞனின் வாழ்க்கையில் சாதி மற்றும் பிற காரணங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை பேசியிருப்பதே இப்படத்தின் கதை.

பட ஓப்பனிங்கில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான பலனல் கபடி போட்டி. இந்தியா அணி சார்பாக கபடி ஆட வந்திருக்கும் துருவ் புறக்கணிக்கப்பட்டு லிஸ்டில் பெயர் இல்லை. தூருவ் ஷாக் ஆகிறார். இந்திய அணிக்கு கபடி ஆட தாழ்ந்த சமூகத்தை சேர்ந்த துருவ் எப்படி கஷ்டப்பட்டு வந்தார் என்ற பிளாஷ்பேக் ஆரம்பித்து முடிகிறது. முடிவில் துருவ் இந்திய அணியில் பெயர் இடம்பெற்று பாகிஸ்தான் அணியை தோற்கடித்தாரா? இல்லையா? என்பதை சுவாராஸ்யமாக சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.
துருவ் விக்ரம் இப்படத்திற்கு தனது முழு உழைப்பையும் கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

துருவ் காதலியாக அனுபமா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். துருவ் அக்காவாக ரஜிஷா விஜயன் நடிப்பும் அருமை. துருவ் அப்பாவாக பசுபதி கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். பாண்டிய ராஜாவாக அமீர் நடிப்பும் அருமை. கந்தசாமியாக லால் நடிப்பும் அருமை. அருவி மதன், அழகம்பெருமாள், ரேகாநாயர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். எழில் அரசுவின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். நிவாஸ் பிரசன்னாவின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும்தான் படத்திற்கு பெரிய பலமே.

மாரி செல்வராஜ் இதுவரை இயக்கியுள்ள 4 படங்களுமே ஹிட் அந்த வரிசையில் இந்த பைசன் படமும் பெரியளவில் ஹிட்டாகும். வாழ்த்துக்கள்.

