Accharam Tamil Cinema Latest News

Reach latest Tamil Cinema Articles, News & Updates brought to you by Accharam !
*கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!*

*கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!*

Monday, November 3, 2025 Acchara Tv New film Tamil movie First look

*கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!*

'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்ப காணோம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது :

ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.

மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.

மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ்

தயாரிப்பு - எஸ். கே. செல்வகுமார் B. E.,

எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்

ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம்

இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா

படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்

கலை இயக்கம் – வீரசமர்.

பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா,

திரை வண்ணன், சக்தி (USA)

நடன அமைப்பாளர் – ரிஷி

உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ்

தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர்

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ்

நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

No comments yet
Search