Accharam Tamil Cinema Latest News

Reach latest Tamil Cinema Articles, News & Updates brought to you by Accharam !
*கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், மற்றும் கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு*

*கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், மற்றும் கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு*

Friday, October 31, 2025




கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாககார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இன்று கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார்.



2025 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக கார்த்திகா சமீபத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இறுதிப் போட்டியில் ஈரானு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார், பல முக்கியமான புள்ளிகளைப் பெற்றார். 


கார்த்திகா மற்றும் அவரது குழுவினரின் கபடியும், அவர்களது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பைசனின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது, பைசன் திரைப்படம் சாதாரண அடிமட்டத்திலிருந்து தேசிய அங்கீகாரத்திற்கு உயர்ந்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான திரு மணத்தி கணேசன் அவர்களின் பயணத்தை குறித்த ஒரு திரைப்படமாகும்.விடாமுயற்சியையும், ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் வலியுறுத்துகிறது பைசன் திரைப்படம்.

தங்கமகள் கார்த்திகாவையும், அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கவுரவிப்பதற்கு பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ், அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் பைசன் படக்குழுசார்பாக இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துகார்த்திகாவிற்கும் , குழுவிற்கும் காசோலைகள் வழங்கினார்.கண்ணகி நகர் கபடிகுழுவினரையும் சந்தித்துஇன்னும் பல விருதுகளையும் வெற்றிகளைபெறவேண்டும் என வாழ்த்தினார்.

No comments yet
Search