Accharam Tamil Cinema Latest News
அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'கம்பி கட்ன கதை' தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதை
வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்டு வரும் பல கோடி மதிப்புள்ள வைரம் கஸ்டம்ஸ் ஆபீசரிடம் தெரியாமல் சிக்கிக்கொள்ள அதை அவருக்கே தெரியாமல் எடுத்து வந்து தங்களிடம் கொடுக்க வேண்டும் என சரியான 420 நபரான நட்டியிடம் போலீஸ் அதிகாரியான கராத்தே கார்த்தி உதவி கேட்க,

அந்த வைரத்தை எடுத்த உடனே அதை தானே ஆட்டையைப் போட்டு விடலாம் என நினைக்கும் ஹீரோ அதை ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கிறார். போலீசாரிடம் நட்டி சிக்கிய நிலையில், எந்த வைரமும் கிடைக்கவில்லை என சொல்ல கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் பணத்தை திருடிய குற்றச்சாட்டுக்காக சிறைக்குச் செல்கிறார்.

சிறையில் இருந்து திரும்பி வந்ததும் வைரத்தை மறைத்து வைத்த இடத்துக்குச் சென்று எடுக்க நினைக்கும் நட்டிக்கு அங்கே தூங்கும் துறவி சாமியார் என்கிற திடீர் கோயில் உருவாகி இருப்பது தெரிகிறது. கோயிலில் இருந்து வைரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக சாமியாராக மாறும் நட்டி நட்ராஜ் வைரத்தை எடுத்தாரா? இல்லையா? போலீஸிடம் சிக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை

சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு நட்டி நட்ராஜ் மீண்டும் அதே மாதிரியான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என சொல்லிவிட்டு மெடிக்கல் செக்கப் மூலமாக மோசடி செய்து பணம் பெறுவதில் தொடங்கி, சாமியராக மாறி கடைசியில் பொய்லாசா தீவை சொந்தமாக்குவது வரை என ஒட்டுமொத்த எனர்ஜியையும் கொட்டி நடித்து படத்தை கடைசி வரை தனது தோளில் சுமந்துள்ளார். அவருடன் சிங்கம்புலி சேர்ந்துக் கொண்டு அடிக்கும் காமெடி காட்சிகள் பரவாயில்லை ரகம்.
ஷாலினி, Sri Rsnjsni, ஜாவா சுந்தரேசன், முத்துராமன், கோதண்டம், TSR ஏன இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சதீஷ் செல்வம் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.
இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி காமெடி படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி படமாக அமைந்திருக்கும். வாழ்த்துக்கள்.

