Accharam Tamil Cinema Latest News

Reach latest Tamil Cinema Articles, News & Updates brought to you by Accharam !
ஆர்யன் திரைப்பட விமர்சனம்

ஆர்யன் திரைப்பட விமர்சனம்

Thursday, October 30, 2025


விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன், கருணாகரன், ஷ்ரத்தா மற்றும் பலர் நடித்து அக்டோபர் 31 ல் வெளியாகும் படம் ஆர்யன்.

கதை

நிருபர் ஷரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மினிஸ்டரை பேட்டி எடுக்கவேண்டும் அவர் வராதஸசூழ்நிலையில் பிரபல கதாநாயகனை பேட்டி டுத்துக்கொண்டிருக்க அது லைவ்வில் பார்வையாளர்கள் ரசித்துக்கோண்டிருக்க பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன் திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணையக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார். ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்ன வேண்டும் ? என்று அவரிடம் கேட்க அதற்கு செல்வராகவன் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.

செல்வராகவன் மிரட்டல் குறித்து தொடர் கொலைகளை தடுக்க போலிஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் தலைமையில் குழு ஒன்றை அமைக்கிறது. ஐந்து கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அவர் அந்த ஐந்து நபர்களை காப்பாற்றினாரா? இல்லையா? ஐவரை கொல்ல காரணம் என்ன ? என்பதை இதுவரை சொல்லப்படாத கோணத்தில் சொல்லி, திரில்லர் பட விரும்பிகளை வியக்க வைத்திருப்பதே ஆரியன் படத்தின் கதை.

நாயகன் விஷ்ணு விஷால் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகி ஷ்ரத்த ஶ்ரீநாத் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

வில்லனாக நடித்துள்ள செல்வராகன் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். விஷ்னு விஷாலின் மனைவியாக

மானசா சௌத்திரி நடிப்பும் அருமை. கருணாகரன்,சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் படத்தொகுப்பு மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஸ்டண்ட் ஷில்வா, பி.சி ஸ்டண்ட் பிரபு ஆகியோரது சண்டைக்காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

ஜிப்ரன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம்.

கொலையாளி யார்? என்பது தெரிந்து விட்டாலும், அவரைப் பற்றி சிந்திக்க விடாமல், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் ஹீரோவின் பயணத்தை படு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் பிரவினுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கிரைம் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு நல்ல தீணி போடும் படம் ஆர்யன்

No comments yet
Search