Accharam Tamil Cinema Latest News

Reach latest Tamil Cinema Articles, News & Updates brought to you by Accharam !
அசோர்ட்(Azorte) தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறதுசென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நியோஸ்டோர்

அசோர்ட்(Azorte) தனது 2வது ஃபேஷன் கடையுடன் தெற்கு நோக்கி விரிவடைகிறதுசென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நியோஸ்டோர்

Sunday, October 19, 2025



*நடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது* 
சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். 

பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார்.

அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் பரந்த அளவிளான க்யூரேஷன்களின் தொகுப்பைக் காட்டுகிறது, அதே நேரத்தில் இது "யுவர் ஸேஃப் பிளேஸ்" என்ற பிராண்டின் முக்கிய தத்துவத்தை உள்ளடக்கியிருப்பதுடன். தனித்துவத்தையும் சுய வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் ஒரு வரவேற்கத்தக்க சூழலை உருவாக்குகிறது.

சென்னை ஸ்டோரில் பலவகைப்பட்ட நெக்ஸ்ட்-ஜென் புத்தம் புதிய சில்லறை விற்பனைகள் உள்ளன, அவற்றுடன்:● சூழல் சார்ந்த ஸ்டைலிங் பரிந்துரைகளுடன் கூடிய ஸ்மார்ட் ட்ரையல் ரூம்கள்.● நடைபாதைகளில் பிராண்டின் எண்ட்லஸ் ஆஃபர்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான ஊடாடும் டிஜிட்டல் திரைகள்.● தடையற்ற சரக்கு மேலாண்மை மற்றும் தயாரிப்பு பொருட்களை கண்டறிவதற்கான RFID & QR குறியீடு தொழில்நுட்பம்.● உற்சாகமூட்டும், நெருக்கடி இல்லாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் சுய செக்-இன் மற்றும் செக்-அவுட் கவுண்டர்கள்.

தனது எளிமையான பாணி மற்றும் துடிப்பான ஆளுமைக்கு பெயர் பெற்ற கிருத்தி ஷெட்டி, அக்டோபர் 18 அன்று கடையைத் திறந்து வைத்து ரசிகர்களுடன் உரையாடினார், கலக்ஷன்களைப் பார்வையிட்டார், சென்னையில் அசோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதை கொண்டாடினார்.

மும்பை மற்றும் சென்னையில் தனது பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி கடைகளைத் திறப்பதன் மூலம் அசோர்ட் இப்போது இந்தியா முழுவதும் 43 கடைகளை இயக்குகிறது, முக்கிய பெருநகரங்களில் அதிவேக, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் ஃபேஷன்-ஃபார்வர்டு சில்லறை விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கான அதன் இலக்கைத் தொடர்கிறது.
தங்களது மைல்கல் குறித்து அசோர்ட் சந்தைப்படுத்தல் தலைவர் தவால் தோஷி கூறுகையில், "சென்னையின் கிளர்ச்சிட்டும் வகையிலான உற்சாகம் மற்றும் வளர்ந்து வரும் ஃபேஷன் லேண்ட்ஸ்கேப் அசோர்டின் அடுத்த அத்தியாயத்திற்கு ஏற்ற நகரமாக அமைந்தது. இந்த கடை வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளைத் தவிர அதிக அளவிலான பிற தயாரிப்புகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன், தொழில்நுட்பத்துடன் எல்லையற்ற தனித்துவத்துடன் கூடிய ஒரு அனுபவமாக இருக்கும்."

No comments yet
Search