Accharam Tamil Cinema Latest News
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷ், ஜென்சன் திவாகர், இயக்குநர் A வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது.
கதை
கலகல காமெடி கலந்த கல்யாணம் டைவர்ஸ் குறித்த படம். மார்டன் பெண், முற்போக்காக சிந்திக்கும் மாளவிகாவை திருமணம் செய்கிறார் ஐடி ஊழியரான ரியோ. நல்லா வாழ்ந்த இவர்களுக்குள் சில மாதங்களில் பிரச்சினை வருகிறது.விவாகரத்து வாங்க கோர்ட் செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.
ரியோ தன்னோட கேரக்டரை ரொம்ப ஈஸியா பண்ணிருக்கார். கோர்ட் சீன்ல வசனங்கள் இல்லாமையே அழுத்தமான நடிப்பு. நடிப்பில் நல்லாவே முன்னேறியிருக்கார். மாளவிகா மனோஜ், ஜோ படத்தில் அமைதியா வந்து எல்லோரையும் கவர்ந்தவர் இந்த படத்தில் அப்படியே நேரெதிரான கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.ஆர்ஜே விக்னேஷ்காந்த் படத்தின் இன்னொரு ஹீரோ தான். ஆரம்பத்துல ஏதோ காமெடி ரோல் பண்ணுவார்னு பாத்தா இரண்டாம் பாதியில் மனுசன் பின்னிட்டார். கோர்ட் சீன்ல அவர் பேசுற வசனங்கள் அடிபொலி.
ஷீலா குடுத்த வேலையை கச்சிதமா பண்ணிருக்காங்க. ஜென்சன் திவாகர் தான் படத்தின் பில்லர். அவர் அடிக்கிற ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டர்ல விசில் பறக்கும், சிரிப்பு சத்தம் தெறிக்கும். குடும்பஸ்தன், லப்பர் பந்துக்கு அப்புறம் செம்ம ரோல். இயக்குநர் A வெங்கடேஷ் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.சித்துகுமார் பாடல்கள் இசை பின்னணி இசை நல்லா இருந்தது.
ஓளிப்பதிவும் அருமை.காதலர்கள், கணவன், மனைவி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சிலருக்கு ஈகோ நீங்கலாம். சில ஜோடிகள் சண்டை போட்டு அன்பை பரிமாறலாம். சிவகுமார் முருகேசன் ஸ்கிரிப்ட், இயக்குனர் திறமை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
ஆண்களின் நிலையை எடுத்துச் சொல்ல ஒரு படம் வந்ததே ஆறுதல். அதில் ஆண்களின் பக்கம் மட்டும் நிற்காமல் பெண்களுக்கும் பேசியது சிறப்பு. தம்பதிகள் தங்களை உணர்ந்து கொள்ள தாராளமாய் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு பாராட்டுக்கள்.

