Accharam TV
Accharam TV
Signed in as:
filler@godaddy.com
Accharam TV Digital Media
*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது*
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் 'பரமசிவன் பாத்திமா' எனும் புதிய படத்தில் விமல் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
புரொடக்ஷன் நம்பர் 7 ஆக உருவாகும் இப்படம், மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கிறது.
இப்படத்த்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்குகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். படம் குறித்த இதர தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெகு விரைவில் வெளியிடப்படும்.
Share this post:
சினிமா செய்திகள் உடனுக்குடன்
சூடான அரசியல் செய்திகள்
திரை விமர்சனம்
அண்மை செய்திகள் உடனுக்குடன்
Add a description about this category
Add a description about this item
Add a description about this item
Add a description about this item
Add a description about this item
https://www.youtube.com/watch?v=OLgQzm-5nio
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.